Malayaga Makkal Ondrium

மலையக மக்கள் ஒன்றியம்

1119445
  • Charity Reg No

    1119445

#
  • 01 Aug 2023

Donation of Duplo Machine to Zonal 2 Office Nuwareliya

பிரித்தானியா வாழ் மலையக மக்களின் அமைப்பான மலையக மக்கள் ஒன்றியத்தினால் எமது வலயத்தின் கோட்டம் இரண்டிற்கு ஒரு DUPLO இயந்திரம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வானது எமது வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர், நிர்வாக மற்றும் அபிவிருத்திக்குரிய பணிப்பாளர்கள் முன்னிலையில் பிரித்தானிய மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் பாலசேகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை கோட்டம் 2 இன் கோட்டக்கல்வி பணிப்பாளர் தலைமையில் அதிபர், ஆசிரிய ஆலோசகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 

 இதன்போது முப்பது வருடங்களுக்கு மேல் எமது வலயத்தின் ஆசிரியர் மற்றும் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழரசி அவர்களுக்கு பிரிவு உபசார நிகழ்வும் நடத்தப்பட்டது.

அதன்போது அவரால் கோட்டக்கல்வி காரியாலயத்திற்கு தளபாடங்கள் சிலவும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. 

 இதனை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்த  கணபதிப்பிள்ளை மகேந்திரன் , மஞ்சுள டி சில்வா, யோகராஜ் ஆகியோருக்கும்  கோட்டத்தின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

 அத்தோடு  மகேந்திரன் அவர்கள் தனது சொந்த செலவில் காகிதாதிகள் சிலவற்றையும் வழங்கி வைத்தார். இதனை மிக சிறப்பாக நிறைவேற்றிய கோட்டம் இரண்டின் அதிபர், ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் பொருளாளர் மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்கு எமது கோட்டத்தின் சார்பான நன்றிகள்.